Loading...
アイコン

Naseem Kader

チャンネル登録者数 1800人

2982 回視聴 ・ 122いいね ・ 2020/11/26

🌈 🌈முபஸ்மிலன் முஹம்திலன் முஸல்லியன் *முஸல்லிமா......*🌈 🌈

🍓 காமிலே! ஷெய்கு ஸமதானியே! 🍓

🏳️‍🌈அருங்குணர் அஹ்மதர்
நபித்திருபேரர்
அண்ணல் கெளதுல்
அஃழமவர்
நெஞ்சங்கள் மகிழ்ந்தே
கொண்டாடிடும் நாளிதே
வஞ்சங்கள் விரைந்தே ஓடிடும்

🏳️‍🌈 மீலாதுல் கெளது மீலாதுல் கெளது அல மீலாது خஹைரில் வலீ
மீலாதுல் வலீ* மீலாதுல் வலீ அல மீலாது خஹைரில் வலீ
மஃஷுகே ரஹ்மானி! கிந்தீலே
நூரானி!
முஹ்யித்தீன் அப்துல் காதிர்
ஜீலானி!

🏳️‍🌈நற்பதியாம் ஜீலானில்
நங்கை
நல் ஃபாத்திமா
நறைசேர் அபுசாலிஹ் இணை
இல்லற வாழ்வினில் பூத்து
புகழோங்கினீர்
இறைநேசர்களின் ராஜரே!

🏳️‍🌈 அஹதவின் அகமிய அருள்
அமுதூற்றிலே
அப்துல்காதிரே தவமிருந்தீர்
ஹக்கனின் காதலில் நிறை
நீராடியே
மிக்கஉயர்வடைந்தீர்
யாகௌதுனா!

🏳️‍🌈 பொய்மை பொறாமை
பொல்லாங்குகள் வீழ்த்தியே
வாய்மை தரீகத்துல்
காதிரிய்யா
மெய்வழி ஈந்த மெஞ்ஞானியே
மாநிதி
வையகம் கண்ட வள்ளல்
ஷெய்குனா!

🏳️‍🌈ஞானத்தேனுரைகளை
நல்கியே
மானிடர்
மனத்துருள்களை துலக்கி
வைத்தீர்
ஞாலத்தின் ஞாயிறாய்
பன்னூட்களை தந்தீர்களே!
காமிலே! ஷெய்கு ஸமதானியே!

🏳️‍🌈 திங்கள் நபி ஜோதியே
சங்கை
குருநாதரே!
துங்க மஹ்பூபே!
சுப்ஹானியே!
தங்கள் திருகாட்சியை
எங்கள்
விழி நேரிலே....
தந்துதவ வேணும்
யா முஹ்யித்தீன்!

🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈
ஆக்கம்: அல்-ஹாஜ் அல்- ஹாஃபிழ்

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: direct